என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பே...