
தி ஸ்மைல் மேன் விமர்சனம்
சரத்குமாரின் 150 ஆவது படமாகுமிது.
கொல்பவர்களின் மேலுதட்டையும், கீ்ழ் உதட்டையும் அறுத்து நீக்கி, அவர்களது பல்வரிசை தெரியும்படி முகத்தைச் சிதைத்து, பொது இடத்தில் வீசி விட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அக்கொலைகாரனால் விபத்துக்குள்ளாகும் காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ‘தி ஸ்மைல் மேன்’ எனும் கொலைகாரனைப் பிடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார். யாரந்த ஸ்மைல் மேன், எப்படி அவன் சிக்கினான் என்பதுதான் படத்தின் முடிவு.
மாலாக்கா கதாபாத்திரத்தின் மூலம் றெக்க (2016) படத்தைக் காப்பாற்றிய ஷிஜா ரோஸ், இப்படத்தில் புலனாய்வு செய்யும் அதிகாரி கீர்த்தனாவாகத் தோன்றியுள்ளார். கதைக்கோ, கதைக்குள் நடக்கும் புலனாய்வுக்கோ அவர் உதவாவிட்டாலும், அவரது இருப்பு (presence) படத்திற்கு அழகைச் சேர்த்துள்ளது. ராஜ்குமார் ஏற்றிருக்கும் பிச்சுமணி எனும் கதாபாத்திரம் நகைச்சுவைக்குக் கடைசி வ...