Shadow

Tag: ஷில்பா மஞ்சுநாத்

Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் எனப் பொருள்படும். க்ரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பத்திரிகையில் தொடராக எழுத முடிவு செய்யப்படுகிறது. அதற்கு உதவுவதற்காக எழுத்தாளரின் மகனான பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். சூளைமேட்டு காவல் நிலைய ஆய்வாளரான ராமையாவிற்கு வழக்குகளில் உதவுகிறார். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க உதவுகிறார் வெற்றி. சிங்கப்பூர் ஆணழகன் பட்டத்தை வென்ற மகேஸ்வரன் தேவதாஸ், இப்படத்தை இயக்கி வில்லனாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற குறை எழுந்தாலும், வில்லனுக்கான கம்பீரமான உடற்தோற்றத்தால் சமாளித்துவிடுகிறார். பிரபாகரன் பாத்திரத்தில் நடித்த வெற்றி நாயகனாக இருந்தாலும், ஆய்வாளர் வேடத்தில் நடித்துள்ள தம்பி ராமையா படத்தை நகர்த்திச் செல்பவராக உ...
”ஷில்பா மஞ்சுநாத் உண்மையான ஸ்போர்ட்ஸின் கஷ்டங்களை சொன்னார்” –  பாக்யராஜ்

”ஷில்பா மஞ்சுநாத் உண்மையான ஸ்போர்ட்ஸின் கஷ்டங்களை சொன்னார்” – பாக்யராஜ்

சினிமா, திரைச் செய்தி
JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் "சிங்கப் பெண்ணே". விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வினில்…தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்க...
பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளமையையும், பேரழகையும் தரும் சித்தரின் சூட்சும ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் சிக்குகிறது. அந்நிறுவனம், ஆதரவற்ற முதியவர்கள் மீது அந்த ஃபார்முலாவைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அவர்களிடம் சிக்கும் சச்சுவின் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்பட, சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல் உருமாறிவிடுகிறார். உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் குழப்பத்தை நகைச்சுவையாகவும், கார்ப்ரேட் கம்பெனியின் தகிடுதத்தத்தை சீரியசாகவும் படம் சொல்லியுள்ளது. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார். பேத்தி காதலைச் சொல்லிவிட, பாட்டியோ முறைப்பைக் காட்ட, விஜய் தவிக்கும் காட்சிகள் நன்றாக உள்ளன. ஷில்பா மஞ்சுநாதின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அவரது அம்மாவான சச்சுவை, லிவிங்ஸ்டனின் மனைவி சாடை பேசி விட, சச்சு கோபித்துக் கொண்டு வெளியேறி கா...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் கல்லூரி மாணவியாகவும் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது. எனினும், இதய ராணியாக அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. முடிவெடுக்க முடியாமல் குழம்பி, அக்குழப்பத்தை நாயகன் மேல் கோபமாகக் காட்டும் காட்சி என தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார். படத்தின் பலமே, பிரதான பாத்திரங்களின் கே...
காளி விமர்சனம்

காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்...