Shadow

Tag: ஷிவா

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது. இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. தேவர் மகன் கமல் ஹாசன் கெட்டப்பில் அறிமுகமாகும் ஷிவா, படத்தின் முடிவில் மீண்டும் தேவர் மகன் க்ளைமேக்ஸ்க்கே வந்துவிடுகின்றனர். இடையில், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, பிசாசு, ஸ்பீடு, டெர்மினேட்டர் என இஷ்டத்திற்கு வலம் வருகிறது. எவ்வளவு யோசித்தாலும், முதல் பாகத்தின் காட்சிகள் எதுவு...
கலகலப்பு – 2 விமர்சனம்

கலகலப்பு – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள்  இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பிரதான ஜோடிகளான ஜீவா - கேத்தரீன் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என...
அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை. ‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான...
தமிழ்படம் விமர்சனம்

தமிழ்படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"தமிழ்படம்" - பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே பெற்றுள்ள முழுநீள நகைச்சுவைப் படம். சினிமா பட்டி என்னும் ஊரில் ஆண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்கின்றனர். அங்கு ஓர் ஆண் குழந்தை, நாயகன் ஆகும் ஆசையோடு பிறந்து சென்னை வருகிறது. அந்தக் குழந்தை தனது லட்சியத்தில் வென்றதா என்பது தான் படத்தின் முடிவு. சிவா. சென்னை 600028 மற்றும் சரோஜாவைத் தொடர்ந்து நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள படம். முந்தையப் படங்கள் போல் அல்லாமல் தனி நாயகனாக இப்படத்தில் கலக்கியுள்ளார். கேலி செய்த பின் பொதுவாக அனைவருக்கும் எழும் மென்னகையை எப்பொழுதும்  முகத்தில் அணிந்தவாறே படம் முழுவதும் வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். திஷா பாண்டே அறிமுக கதாநாயகியாக. திரைக்கதையில் அடித்து வரப்படும் சிறு மீன். அவ்வளவே!! பரிச்சயமற...