சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர்.
மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் ...