கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மேயாத மான், மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படத்தில், தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க, அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்.
கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸின் 'படைப்பு எண்: 3', செப்டம்பர் 12 அன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற...