Shadow

Tag: ஸ்பைடர் மேன்

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

சினிமா, திரை விமர்சனம்
அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை. அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் தேடுவது எனப் புரியாத நிலையில் ஸ்பைடர்மேன் ஞாபகம் வருகிறது. உண்மையில் ஸ்பைடர்-கிட் என்றோ ஸ்பைடர்-அடல்ட் என்றோதான் படத்தின் பெயரை வைத்திருக்க வேண்டும். மேன்!! அவருக்கு இன்னும் வயதிருக்கிறது மேன். பாவம் அந்தப் பச்சிளம் பாலகனைப் பிடித்து, 'நீ தான் ஸ்பைடர்மேன். உங்கிட்ட பல அசாத்திய திறமைகள் இருக்கு. நீ ...