தேஜாவு விமர்சனம்
தேஜாவு என்பது ஒரு ஃப்ரெஞ்ச் சொல். ஒரு நிகழ்வு, ஏற்கெனவே நிகழ்ந்தது போல் தோன்றினாலோ, அல்லது புதிதாய் ஓர் இடத்திற்குச் செல்லும்போது முன்பே அங்கு வந்திருப்பது போல் தோன்றினாலோ, அது தேஜாவு என அழைக்கப்படும். இப்படத்தில், ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஒரு கடத்தலை, மீண்டும் அதே போல் நிகழும்படி உருவாக்குகின்றனர். யார், ஏன், எதற்கு, எப்படி என்பதுதான் படத்தின் கதை.
டிஜிபி மகள் பூஜா கடத்தப்படுகிறாள் என எழுத்தாளர் சுப்பிரமணி எழுதினால், அது அப்படியே நடக்கிறது. இவர் ஏதேனும் எழுதினாலே, அது அடுத்த நிமிடமே நிகழ்கிறது. ஒன்று, சுப்பிரமணி எழுதுவது தற்செயலாக இருக்கலாம்; அல்லது, தீர்க்கதரிசனாமாக (prophecy) இருக்கலாம்; இல்லையெனில், ஏதோ பித்தலாட்டமாக இருக்கலாம். குழம்பிப் போய் நிலை குலையும் டிஜிபி ஆஷோ பிரமோத், மகளைக் கண்டுபிடிக்க, விக்ரம் குமார் எனும் அண்டர்கவர் அதிகாரியை வரவழைக்கிறார். பூஜாவைக் கண்டுபிடிக்க விசா...