Shadow

Tag: ஸ்ரத்தா ஸ்ரீநாத்

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் கதை ...
 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

சினிமா, திரைச் செய்தி
Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த  வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”.முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “சைந்தவ்” திரைப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மிகப் பெரும் பொருட்செலவில் எந்தவொரு சமரசமும் இன்றி உருவாக்கி வருகிறது.சமீபத்தில் “சைந்தவ்” படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 8 முக்கிய நடிகர்களை உள்ளடக்கி கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முடித்து வெற்றிகரமாக திரு...