”மாமா குட்டிமா” ஆல்பம் பாடல் புரோமோ வெளியானது
தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் "மாமாகுட்டிமா" புரோமோ வெளியாகியுள்ளது.லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை’
பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய ...