Shadow

Tag: ஸ்ரீஜா

கோனேரிப்பட்டி பாலத்தில்

கோனேரிப்பட்டி பாலத்தில்

சினிமா, திரைத் துளி
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு "பவுனு பவுனுதான்" படத்தின் படப்பிடிப்பு கோனேரிப்பட்டிப் பாலத்தில் நடந்தது. அப்பாலம் சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ளது. பாக்யராஜும் ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தற்போது, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, “மிக மிக அவசரம்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கோனேரிப்பட்டி பாலம் கதைக்குத் தேவைப்படுவதால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்குப் பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். ‘பவுனு பவுனுதான்’ படம் போலவே இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்திச் செல்கின்றனர். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமான் நடிக்கிறார். கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷும்,...