குய்கோ விமர்சனம்
கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த "குய்கோ".
அமைதிப்படை திரைப்படம் நம் நாட்டின் அரசியல் சூழலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்த திரைப்படம். தமிழ்ப்படம், நம் தமிழ் சினிமாவில் இருந்த க்ரிஞ்சான விசயங்களையும், அவலங்களையும் பகடி செய்தது. அந்த வரிசையில் நாம் வாழும் வாழ்க்கையையும், நம்மிடம் இருக்கும் அறியாமையையும், பகட்டான வாழ்க்கை மீது...