Shadow

Tag: ஸ்ரீராமலு நாயுடு

ஆர்ய மாலா (1941)

ஆர்ய மாலா (1941)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வ...