![நாடு விமர்சனம்](https://ithutamil.com/wp-content/uploads/2023/11/naadu-movie-review.jpg)
நாடு விமர்சனம்
‘எங்கேயும் எப்போதும்’, ‘ இவன் வேற மாதிரி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் “நாடு”. மருத்துவர் ஒருவர் இல்லாமல் சொல்லொன்னா துன்பத்திற்கு உள்ளாகும் மலைவாழ் கிராம மக்கள், இறுதியாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் ஒரு பெண் மருத்துவரைத் தங்கள் கிராமத்தில் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் போராட்டமே இந்த “நாடு” திரைப்படம்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த மலைக்கிராமத்திற்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்குள் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பிவ...