Shadow

Tag: ஸ்ருஷ்டி டாங்கே

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

“கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளேன்” – ஸ்ருஷ்டி டாங்கே

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இ.வி.கணேஷ்பாபு சார் மிகவும் சிறு வயதில் இருந்தே எனக்குப் பழக்கம். வீட்டில் நடக்கும் விழா அனைத்திற்கும் வருவார், இந்த விழாவையே வீட்டில் நடக்கும் ஒரு விழா போன்றே நடத்துகிறார். கட்டில் என்பதை ஒரு உருவகமாகத் தலைமுறை கடந்த ஒரு அடையாளமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. ‘கோயில...
எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

சினிமா, திரைத் துளி
மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பெளண்டேசன் இணைந்து நடத்தும் 19ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்குக் “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, "வருடந்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக, 'கட்டில் திரைப்பட உருவாக்கம்' என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பைத் தனிச்சிறப்ப...