Shadow

Tag: ஹன்சிகா

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

கேலரி, சினிமா, திரைத் துளி
ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

மருத்துவம்
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிற...
லேடி சூப்பர் ஸ்டார் 2019

லேடி சூப்பர் ஸ்டார் 2019

சினிமா, திரைத் துளி
நாயகிகள் வெறுமனே மரத்தைச் சுற்றி ஆடிப் பாடும் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போதைய இளம் இயக்குநர்கள் பலர் நாயகிகளைப் பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். இளம் இயக்குநர் U.R.ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதாபாத்திரத்தைப் படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிட தக்கது. இந்தப் படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது என்றார் ஜமீல். "இந்தக் கதையையும் , திரைக்கதையையும் மெருகேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்தக் கதையின் நாயகி அழகும் அறிவும் தீரமும் இளமையும் நிறைய பெற்றவள். ஹன்சிகா உரிமையுடன் இந்தக் கதாபாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும்...
“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

சினிமா, திரைத் துளி
ஹன்சிகா மோத்வானி பிரதான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ். இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சவாலான அக்கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்திச் சுழலும் இந்த த்ரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதிப் படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் தயாராக இருக்கிறது. “ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பைக் கொடுத்திரு...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபா...
மனிதன் விமர்சனம்

மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம். பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபரா...
போக்கிரி ராஜா விமர்சனம்

போக்கிரி ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்' என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை. யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். "எனக்கே விபூதி அடிக்கிறாயா?" என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, "பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?" என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும்...
அரண்மனை 2 விமர்சனம்

அரண்மனை 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம். சித்தார்த் ஆச்சரியப்படுத...
புலி விமர்சனம்

புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார். ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்...
வாலு விமர்சனம்

வாலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருமென விளம்பரப்படுத்தப்பட்ட வாலு படம், ஆயிரம் சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக வெளி வந்தேவிட்டது. காதல் என்றாலே டார்ச்சர் என நினைக்கும் ஷார்ப்க்கு (நாயகனின் பெயர்), ப்ரியா மகாலட்சுமி மீது காதல் மலர்கிறது. முறை மாமனுடன் ப்ரியா மகாலட்சுமிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், ஷார்ப் எப்படி தன் காதலை வெளிப்படுத்தி ப்ரியாவை சம்மதிக்க வைக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவை, காதல், அப்பா செண்ட்டிமென்ட், தங்கச்சி செண்ட்டிமென்ட், இடையிடையே ஆக்ஷன் என கலந்து கட்டியடித்துள்ளார் சிம்பு. இயக்குநர் விஜய் சந்தரின் இந்தக் கதையை விரும்பி, சிம்பு தாமாகவே முன் வந்து இப்படத்தில் நடித்துள்ளார். ஜாலியாப் போகிறது முதற்பாதி. இரண்டாம் பாதியில், ‘நான் ஏன் இப்படிச் சொன்னேனா?’ என எதற்கெடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ்-கட் போட்டு, ஒவ்வொரு வசனத்துக்கும் முன் நடந்தது என்ன என்ற ரீ...
அரண்மனை விமர்சனம்

அரண்மனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார். தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தைய...
மான் கராத்தே விமர்சனம்

மான் கராத்தே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொ...