Shadow

Tag: ஹரார் படம்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை. ‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என அழைக்கின்றனர். செம்மமண் நிறைந்த தரை மீது பனி பொழியும் கலவையான இடத்தில் அமைந்த மாளிகையை அவர்கள் அப்படி அழைக்கின்றனர். இந்த உண்மை எடித்துக்குத் தெரிய வரும் முன்பே, எல்லாம் கை மீறிப் போய்விடுகிறது. போதிய பணமின்றி செப்பனிடாத காரணத்தால், தாமஸ் ஷார்ப்பின் மாளிகையான க்ரிம்ஸன் பீக்கின் தோற்றமே அச்சுறுத்தும் விதமாய் விசித்திரமா...