Shadow

Tag: ஹரா திரைப்படம்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

சினிமா, திரைத் துளி
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாகப் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, 'ஹரா' திரைப்படத்தின் அதிரடியான டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக, 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கெனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்குப் பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கத...