
எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம்
ஒரு நல்ல திரைப்படம் வந்தால், அதை அப்படியே காப்பயடிப்பது போல் மோசமான பல திரைப்படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”. ஒரு நல்ல கருத்தை கூட எப்படி யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாத விதத்தில் கூறுவது என்பதற்கான சமீபத்திய உதாரணமாகவும் விளங்குகிறது “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா போன்ற விளையாட்டுத் தொடர்பான பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச முடியும். அதே போல் சம காலத்தில் போற்றுதலையும் விவாதங்களையும் கிளப்பி வரும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச இயலும். எதை முன்னிட்டு என்றால் விளையாட்டுத் துறைக்குள் இருக்கின்ற அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சி என இந்த இரண்டையும் முன்னிட்டு தான்.ஆனால் மேற்கூரிய உதாரண திரைப்படங்...