“பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு மிகப்பதட்டமாக இருந்தேன்” – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட் ஆகும். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் முத்தையா, " 'அடியே' படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப் படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சி செய்கிறோம்" என்றார்.
இசையமைப்பாளர் வான், "விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து, என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என் ட...