Shadow

Tag: ஹிப்ஹாப் தமிழா

ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8

ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8

இது புதிது
கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகானாகக் ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் (Return Of The Dragon)” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்க் என்டர்டெயின்மென்ட், ராஜ் மெலடிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழக சுயாதீன இசைத்துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ்த் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகானாக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்” எனும் பெயரில் லண்டன், மலேஷியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இ...
ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். ...
மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

சினிமா, திரைத் துளி
தரமான நகைச்சுவை ரகளை நிச்சயம் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர். ஒரு டீசரை உருவாக்குவதற்கு நிறைய திறமையும் பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதைக் காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு. ராதிகா சரத்குமார், த...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க...