Shadow

Tag: Amma kanakku tamil review

அம்மா கணக்கு விமர்சனம்

அம்மா கணக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மகளின் கணக்குப் பிரச்சனையை அம்மா எப்படிக் கணக்கு போட்டே தீர்க்க முயல்கிறார் என்பதுதான் படத்தின் கரு. ஓட்டுநரின் மகன் ஓட்டுநராகவும், வேலைக்காரியின் மகன் வேலைக்காரியாகவும் தானே போகப் போகிறார்கள்; அதற்கு ஏன் அநாவசியமாகக் கஷ்டப்பட்டுப் படிக்கணும் என்கிறாள் பத்தாம் வகுப்பு மாணவி. ...