
அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா
அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் துவங்கி வைத்தார் .
ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூஜ்ஜியமாக உறுதிப...