பனாரஸ் விமர்சனம்
த்ரில்லர் கதை போல் துவங்கி, காதல் கதையாகப் பயணித்து டைம்லூப் கதையாக முடிகிறது பனாரஸ்.
ஹீரோ ஜையீத் கான் தன் பணக்காரத்தனத்தை சவால்களிலும் ஜாலி கேளிக்கைகளிலும் காட்டக்கூடியவர். அவர் தன் நண்பர்களின் சவால் ஒன்றை ஏற்று நாயகி சோனல் மான்டிரோவுடன் அவருக்குத் தெரியாமல் ஒரு புகைப்படம் எடுத்து விடுகிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் பரப்பப்படுகிறது. அதனால் மோனலுக்குச் சிக்கல்கள் எழ, அவர் படிப்பு எல்லாவற்றையும் துறந்து தன் உறவினர் வசிக்கும் காசிக்குச் செல்கிறார். குற்றவுணர்ச்சியில் விழும் நாயகன் மன்னிப்பு கேட்பதற்காக நாயகியைத் தேடிச் செல்கிறார். பாதிக்கதையில் டைம்லூப் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்.
முதற்படம் என்ற சுவடு தெரியாமல் நடித்துள்ளார் ஜையீத்கான். எமோஷ்னல் காட்சிகளில் வருங்காலங்களில் நன்றாகத் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையை இப்படத்தில் கொடுத்துள்ளார். நாயகி சோனல் மான்டிரோ பார்ப்பதற்கு அழகாக...