Shadow

Tag: Bayama irukku movie review

பயமா இருக்கு விமர்சனம்

பயமா இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம். படத்தின் பிரதான...