Shadow

Tag: C.N.Kumar

த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம்

த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம்

சினிமா, திரைத் துளி
த ஸ்டீலர் எனும் படத்தை இயக்கியுள்ள ஜெகதீஸ் கண்ணா, ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும், “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்” படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நாடகக்கலை மூலம் வானியல் & விமான அறிவியலைக் கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குநர் ஆவார். 2017 முதல் ஜகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை கூறி முயற்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் திறக்காமல் தள்ளிக்கொண்டே போக, தானே சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்க முடிவு செய்து ஸ்டீலர் கதையை எழுதினார். தன் வாழ்வில் நடந்த “லேப்டாப் திருட்டு” சம்பவத்தை மையாக வைத்து எழுதிய கதை. திருட்டு நடந்த நேரம், வீட்டில் எட்டு நண்பர்கள் இருந்தனர். போலீஸ் எட்டு பேரையும் விசாரிக்க, அதைப் பார்த்த ஜெகதீஸின் மனதில் கதையின் ...
உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

சினிமா, திரைத் துளி
டூ மூவி பஃப் எனும் நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம். இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர், “கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவத்தைப் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லாக் காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும். பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமை இருக்கும். ஒரு காட்சியையும் வேறு எந்தப் படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்க...
தொரட்டி விமர்சனம்

தொரட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார...
தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

சினிமா, திரைச் செய்தி
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மாரிமுத்து, "ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்குத் தொரட்டியைப் பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி, ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப் படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீப காலமாகக் கலைப் படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதிச்சாயமும் பூச வேண்டாம...
த்ரிஷாவின் கர்ஜனை

த்ரிஷாவின் கர்ஜனை

சினிமா, திரைத் துளி
த்ரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாகத் தயாராகி உள்ளது. செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசையமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கர்ஜனை படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் பற்றி, "செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்குக் கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தவறிற்காக திரிஷாவின் காதலர் மேல் பழி வர, அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் த்...
‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

சினிமா, திரைச் செய்தி
சினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது, "பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று ப...
புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

புது வேகத்தில் இசையமைப்பாளர் சத்யா

சினிமா, திரைத் துளி
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா, இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த மெனக்கெடலின் பொருட்டே, அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் அவருக்க...
விஜய் சேதுபதியின் எடக்கு

விஜய் சேதுபதியின் எடக்கு

சினிமா, திரைத் துளி
எடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகவுள்ளது” என்றார்....