பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்
மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். அப்பொழுது காரணம் சொல்லுவார் – ‘கழுத்துல பாம்பு ஊறுது, கைல இருக்க பம்புல இருந்து தண்ணி வரணும், மாடு வேற மிரளாம பார்த்துக்கணும், டயலாக்கும் சொல்லணும்னா எப்படி சார்?’ ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யும் போது அந்த வேலையின் தரத்தில் நாம் சமரசம் பண்ணிக் கொள்வோம். கேட்டாலும், “ஒரே நேரத்தில் இத்தனை வேலை செய்து பார்த்தால் தெரியும் உனக்கு” என வியாக்கானம் பேசுவோம...