LGM விமர்சனம்
தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை.
இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதே உண்மை.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கெளதம், மீராவிற்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் செட் ஆகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நவீனகால யுக்தியான 2 வருடம் பழகிப் பார்க்கும் கான்செப்டை கையில் எடுக்கிறார்கள். ஒரு வழியாக இருவருக்கும் ஒத்துப் ப...