மெய் விமர்சனம்
மெய் - உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம்.
அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது.
தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள...