Shadow

Tag: Escape Artists Madan

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

சினிமா, திரைச் செய்தி
ஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் "முன்னோடி". இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார். விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, "பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன். ‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் 'அக்கம் பக்கம் 'பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்?’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார். அவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரத...