Shadow

Tag: FF8 vimarsanama

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...