Shadow

Tag: J.சுரேஷ்

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

சமூகம்
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார். J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது. தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்....