Shadow

Tag: Jason Statham

ஃபாஸ்ட் X விமர்சனம்

ஃபாஸ்ட் X விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக். டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக...
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட...
உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று. வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேஸிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிடும் கும்பல் பற்றிய படமாகத் தொடங்கி, அடுத்தடுத்த தொடர்களில், சேஸிங் காட்சிகள் தவிர அதிரடி ஆக்ஷன் சம்பவங்களை ஒருங்கிணைத்து, உலவு பார்த்து பயங்கர சதிகளை முறியடிக்கும் பலம் மிக்க சூப்பர் ஹீரோக்கள் தொடராக (Franchise) ஆக ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் உருமாறிவிட்டன...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 'தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பமே அதகளமான கார் ரேஸில் தொடங்குகிறது. ரசிகர்கள், இந்தத் தொடர் படங்களில் இருந்து என்ன எதிர்பார்ப்பார்களோ அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் க்றிஸ் மார்கன். கதை, லாஜிக் எல்லாம் இரண்டாம் பட்சமே! ரோலர் கோஸ்டரில் இரண்டு சுற்று போய் வந்தது போன்ற உணர்வை தரக்கூடிய பொழுதுபோக்குச் சித்திரம். அதனால் தான் உலகளவில் வசூலில் ரெக்கார்ட் பிரேக் சாதனை புரிந்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலே விர்ர்ரூம் எனச் சீறும் கலர் கலரான கார்கள் தானே ஞாபகம் வரும். இப்படத்தில் ஒரு படி மேலே சென்று, "கார் மழை"யைப் பொழிந்துள்ளார் இயக்குநர் கேரி க்ரே. விஷூவலால் வாயடைக்க வைக்கின்றனர். 'தெறி மாஸ்' என்ற பதம் இப்படத்திற்கு மிகப் பொருந்தும். வில்லனாய் உள்ளே வந்த ஜேஸன் ஸ்டாத்தமை, டொமினிக் டீமு...