Shadow

Tag: K.E.ஞானவேல்ராஜா

கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...
“விக்ரமைத் தவிர வேறு எந்த நடிகராலும் முடியாது” – கே.ஈ. ஞானவேல் ராஜா | தங்கலான்

“விக்ரமைத் தவிர வேறு எந்த நடிகராலும் முடியாது” – கே.ஈ. ஞானவேல் ராஜா | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ''ஒரே தருணத்தில் 'தங்கலான்', 'கங்குவா', 'வா வாத்தியார்' போன்ற படங்களைத் தயாரிப்பதற்குக் காரணம் எனக்கு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ், சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம்.‌ இதனைக் கடந்து வருவதற்கு மிகக் கடினமாக இருந்தது. இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்...
விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

விக்ரமுக்காக, சூர்யா தொடங்கிய ஸ்டுடியோ | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, “சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம். மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா. ரஞ்சித்தும் விக்ரம் சாரைச் சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார். அந்தத் தேதிகள் தள்ளிப் போனபோது கூட அதே கெட...
யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து 'யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா, ''திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ...
பா. ரஞ்சித்தின் சீயான் 61

பா. ரஞ்சித்தின் சீயான் 61

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்’ எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களைத் தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோர் சிற...
விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்

விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் தனது அடுத்த படத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 Aவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது....
மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

மெஹந்தி சர்க்கஸ் – மூன்று காதலின் சங்கமம்

சினிமா, திரைச் செய்தி
“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சு செஞ்சிருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது; ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில். இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு. சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் என் கேரக்டரான ஒத்த வெடி அப்படி" என்றார் ஆர்.ஜே விக்னேஷ் காந்த். "மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா ச...
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் "மிஸ்டர் லோக்கல்". "இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்பக் கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது. 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் ...
ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் டீக...
பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

சினிமா, திரைத் துளி
தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார், ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "தேள்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் C.சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குநராகச் செந்தில் ராகவனும், சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார். "ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர் ...