Shadow

Tag: King of Kotha திரைப்படம்

King of Kotha விமர்சனம்

King of Kotha விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடு...