கொளஞ்சி விமர்சனம்
பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை அவரது தந்தை கண்டித்தால், அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எனப் பிணக்கு கொள்கிறான்.
ராஜாஜ், நைனா சர்வாரின் காதல் அத்தியாயம் படத்தின் சுவாரசியத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை. தந்தை - மகன் உரசல் என்ற கருவில் பெரிதும் கவனம் செலுத்தாமல், ஆனால் அதைப் படத்தின் மையமாக வைத்துத் தைரியமாகப் படமெடுத்துள்ளார் இயக்குந...