
“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜெய் கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ பட இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில், KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி” ஆகும். நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக் - மெர்லின் இசை அமைத்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.
இப்படத்தின் நாயகனான KPY பாலாவிற்கு நாயகியாக நடிக்க பலர் தயங்கியுள்ளனர். இதைப் பற்றிப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாலா, “இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இயக்குநர் அலுவலகத்தில் பல நடிகைகள் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். ‘கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ?...


