மோசடிக்கு 465
விஜய் டி.வி.யின், ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களில் நடித்துப் பரவலாக அறியப்படும் கார்த்திக்ராஜ், 465 எனும் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகுகிறார். நாயகியாக நடிக்கும் நிரஞ்சனாவிற்குத் தமிழில் இது மூன்றாவது படமாகும்.
இப்படத்தை எல்.பி.எஸ்.பிலிம்ஸ் சார்பாக, எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படத்தின் கதையும் அவருடையதே!
“அடுத்து என்னென்னு ஜட்ஜ் செய்ய முடியாத ஃபாஸ்ட் திரைக்கதை தான் படத்தின் பலம். இது ஹாரர் கம் த்ரில்லர் படம். ட்ரெயிலரைப் பார்த்து ஒரு கதையை யூகிப்பீங்க. ஆனால், படம் அதற்கு நேர்மாறாக இருக்கும். இது நாங்க வேணும்னே திட்டமிட்டுச் செய்தது.
படத்தின் தலைப்பெல்லாம் முடிவு செய்த பிறகு, 465 என்ற எண்ணுக்கு ஏதேனும் பொருள் இருக்கின்றதா எனத் தேடினேன். ‘பவர் ஆஃப் ஏஞ்சல் & பாசிடிவ் எனர்ஜி (Power of Angel & positive energy)’ என்று அர்த்தம் இருப்பது தெரிந்தது. தலைப்பு பாசிட்டிவாக...