Shadow

Tag: Nambiyaar விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை. குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள். ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்ட...