காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம்
குழந்தைகளுடன் பார்த்து மகிழ நல்லதொரு படம்.
மோனார்க் எனும் நிறுவனம், மனிதன் காலடிப்படாத 'ஸ்கல் ஐலேண்ட்' எனும் தீவை ஆராய அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறது. "நாம போகலைன்னா அந்தத் தீவுக்கு ரஷ்யா முதலில் போயிடும்" எனும் யோசிக்கும் அமெரிக்க அரசைச் சம்மதிக்க வைக்கிறது. ரொம்ப காக்க வைக்காமல், அதிர்வுகளை ஆராய நாலைந்து வெடிகுண்டுகளைத் தீவுக்குள் போட்டதுமே நாயகன் காங் தோன்றி அதகளம் செய்து விடுகிறார்.
வேரோடு மரத்தைப் பிடுங்கி அசுரர்கள் மேல் எறிந்தனர் வானரப்படை வீரர்கள் என இதிகாசமான ராமாயணத்தில் வர்ணனைகள் வரும். அது போல், மிஸைல் (missile) வேகத்தில் பறந்து வரும் ஒரு மரம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரைக் குறி பிசகாமல் தாக்கும். காங், அந்தத் தீவின் கடவுள். பாதாள லோகத்தில் இருந்து வரும் 'ஸ்கல் க்ராலர்ஸ் (Skull Crawlers)' எனும் ராட்சஷ பல்லிகளிடம் இருந்து தீவைப் பாதுகாக்கிறது காங்.
நிலப்பரப்பு சார்ந்த சாகசப்...