Shadow

Tag: Oru Kadhai Sollattumaa movie

கதை பறையும் ரசூல் பூக்குட்டி

கதை பறையும் ரசூல் பூக்குட்டி

சினிமா, திரைத் துளி
கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு செளண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை 'பாம் ஸ்டோன் மல்ட்டிமீடியா (Palm Stone Multimedia)' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்தப் படம் இதுவரை யாரு...