பட்டதாரி விமர்சனம்
வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை.
சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது நண்பர்கள் அனைவரும் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, அபிசரவணன் மட்டும் விதிவிலக்காய் இருக்கிறார். எந்தப் பெண்ணாவது கை கொடுத்தால் கூட, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்.
‘வாவ்..’ என நாயகனின் இந்தக் குணம் கண்டு காதலில் விழுகிறார் நாயாகி அதிதி. இலக்கியா எனும் அவர் ஏற்ற...