பொய்க்கால் குதிரை – ஒற்றைக் காலில் நடனமாடிய பிரபுதேவா
‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”.
டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமான்...