
நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை
"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி,அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்."
"ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன்.
அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர்.
"வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க, வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??" என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட்.
சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
"நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட...