Shadow

Tag: RJ பாலாஜி

உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர்ஜே விஜய், மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலகப் பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்ஜே விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரைப் பிரபலங்களான நடிகர் மா.கா.பா. ஆனந்தும், நடிகர் ஆர்ஜே விஜயும் தனித்தனி அணியாகப் பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். நடிகை ஆ...
மூக்குத்தி அம்மன் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமீர் கானின் PK படம் தான் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன் என்றாலும், ஆன்மிகத்தின் பெயரால் கற்பனைக்கு எட்டாத அளவு சம்பாதிப்பவர்களைக் கலாய்த்து ஒரு படத்தை உருவாக்கிவிட்டார் RJ பாலாஜி. NJ சரவணனோடு இணைந்து, முதல் முறையாக இயக்கத்திலும் கவனம் செலுத்தியுள்ளார் RJ பாலாஜி.  மூக்குத்தி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 11000 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த நினைக்கிறார் பகவதி பாபா எனும் கார்போரெட் சாமியார். அதை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லப் போராடும் நிருபரான எங்கல்ஸ் ராமசாமியின் முன் பிரசன்னமாகும் அவரது குலதெய்வமான மூக்குத்தி அம்மன், அவரது கோயிலை உலகப் புகழடையுமாறு செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். ராமசாமியால் பகவதி பாபாவைத் தடுக்க முடிந்ததா, அம்மனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஸ்னீக்-பீக்கில், ஏசுவை தனது நண்பரென மனோபாலாவிடம் சொல்லும் மூக்குத்தி அம்மன், திருப்பதி வெங்கடாச...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி ஆயுதத்தின் பெயர் தான் பூமராங். அவற்றை வீசி எறிந்தால், இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரிடமே திரும்பும். பழந்தமிழர்களிடமும், இதே தொழில்நுட்பத்திலான "வளரி" எனும் ஆயுதம் உபயோகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆயுதத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைக் குறியீட்டுப் பெயராகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். "லைஃப் இஸ் எ பிட்ச்" என்ற க்ளைமேக்ஸில் வில்லனிடம் சொல்ல வந்து, பிட்ச் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், 'லைஃப் இஸ் எ பூமராங்' என்பார் படத்தின் நாயகன். எந்த வினையை விதைத்தானோ அதே வினையால் அறுக்கப்படுவான் என்கிற பொருளில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, இரண்டு நதிகளை இணைப்பதில் ஈடுபடும் சக்தி என்பவரைக் கொன்ற வில்லனை, சக்தியின் முகத்திலேயே வந்து பழி தீர்க்கிறார் சிவா. யாரைக் கொன்றாரே, அவரே ...
LKG விமர்சனம்

LKG விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் கைப்பட்டால் சிறந்த குணசித்திர நடிகராகவும் மிளிர வாய்ப்புள்ளது. அதனால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவரை அணுகிய ஆர்ஜே பாலாஜி, தோற்ற அரசியல்வாதி பாத்திரத்தில் அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத்தை நடிக்கவைத்துவிட்டார். போஜப்பனாக நடித்திருக்கும் ராம்குமாருக்கு இது மூன்றாவது படம். அர...
துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

துக்ளக், அமைதிப்படை வரிசையில் LKG

சினிமா, திரைச் செய்தி
எல்.கே.ஜி. படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்தப் படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்துத் தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாகப் பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தை எனக்கு விளக்கினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்தப் படத்தின் இறுதிப்பிரதியைப் பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களைக் கலாய்த...
தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, 'சொடுக்கு' பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தியாதகத் தெரியவில்லை. சுவாரசியத்தைப் படம் முழுக்கத் தக்க வைக்க ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு உதவியுள்ளது. ஆனாலும், காட்சிகளுக்கு இடையேயான 'ஜெர்க்'கும் அவசரமும், கோர்வையின்மைக்கு வழி வகுத்துள்ளது. ஜான்சி ராணியாகவும், அழகு மீனாவாகவும...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக்...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

திரை விமர்சனம்
காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை. த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் சம்பந்தப்பட்ட நடிகைகளோடு பொருத்தி நேரடி பொருள் கொள்ளக் கூடாது. அது ஓர் அழகான குறியீடு. எந்தப் பொழப்பும் இல்லாத விர்ஜின் பையனுக்கு, காதலிக்க எந்தப் பெண் கிடைத்தாலும் தேவதைதான். தேவதையை நேரில் பார்த்திராத யதார்த்தவாதியான நாயகன், நடிகைகளின் பெயரைக் கொண்டு தான் பார்க்கும் பெண்ணை ஒப்பீடு செய்து கொள்கிறான். அப்படி குமாரு...
புகழ் விமர்சனம்

புகழ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏரியாவில் யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய்த் "தட்டி"க் கேட்பவன் புகழ். அப்பழக்கம் அவனை எங்குக் கொண்டு போய் விடுகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் கம்யூனிசத்தின் தேக்க நிலையை பொதுப்புத்தியின் நோக்கில் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. எனினும் அதிகாரத்தின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்ற அதிருப்திக்கு படம் இட்டுச் செல்கிறது. தோழராக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் மிக இயல்பாய் வந்து ஈர்க்கின்றன. ஒன்று, அரசியல்வாதியாக வரும் தாஸ். வீட்டிலிருப்பவரைச் சமாளிக்கணும், கட்சியினரைச் சமாளிக்கணும், அமைச்சரைச் சமாளிக்கணும், காவல்துறையை நட்பாக வைக்கணும் என மனிதனுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். இத்தனையையும் தாஸாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து சுமந்துள்ளார். இரண்டாவது, ஊர் வம...
நானும் ரெளடிதான் விமர்சனம்

நானும் ரெளடிதான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை. தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். விஜய் சேதுபதி, பார்த்திபன் என நீங்கள் யாரை எப்படி திரையில் காண விரும்புவீர்களோ, அவர்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதே போல், வேதாளம் பட டீசரில் வரும் ‘தெறிக்க விடலாமா?’, புலி இசை வெளியீட்டில் டி.ஆர். பேசியது, தனுஷின் ‘இல்ல?’ என மக்களின் கவனத்தை ஈர்த்தவைகளை சாதுர்யமாக ...