தும்பா விமர்சனம்
தும்பா எனும் பெண் புலி தன் குட்டியுடன் தமிழக வனத்துறைக்குள் நுழைந்துவிடுகிறது; ஹரியும் உமாபதியும் பெயின்ட் அடிக்கவும், புலியைப் புகைப்படமெடுக்க வர்ஷாவும் டாப் ஸ்லிப் செல்கின்றனர். அந்தப் புலியைக் கடத்த ஒரு குழுவும் மும்மரமாய் இறங்குகிறது. அதன் பின், டாப் ஸ்லிப்பில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
அருமையான குழந்தைகள் படத்துக்கு உத்திரவாதமளித்துள்ளார் இயக்குநர் ஹரீஷ் ராம் LH. அணில், குரங்கு, தும்பா, அதன் குட்டி புலி என VFX காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது. ஹரியாக தர்ஷனும், உமாபதியாக தீனாவும், நடிக்க மறந்து பேசிக் கொண்டே இருக்கின்றனர். டாப் ஸ்லிப்பின் குளிரில் முகம் விறைத்துவிடுவதால், முகத்தில் எந்த பாவனைகளும் காட்ட முடியாமல் மிகவும் திணறியுள்ளனர். நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் அவர்களுக்கு சரி நிகராய் கம்பெனி தருகிறார். நகைச்சுவை இணையாக இருப்பார்களோ என சந்தே...