கும்பாரி விமர்சனம்
இப்பொழுதெல்லாம் பேய்ப்படங்கள் நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் படங்களைப் பார்க்க திரையரங்கு வாசலை மிதிக்கவே பயமாக இருக்கிறது. சினிமா திரைப்படங்களின் வகைமைகளில் மிகக் கடினமானது நகைச்சுவைத் திரைப்படங்கள் தான். அதை சிலர் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக எழுதிவிடவும் முடியாது, எடுத்துவிடவும் முடியாது. ஆனால் சினிமாத்துறையின் வெளியில் இருந்து பார்க்கும் சிலருக்கு நகைச்சுவைப் படங்களை எளிதாக எடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கும் போலத் தெரிகிறது. எனவே வருவோர் போவோர் எல்லாம் நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, எதையோ எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்குத் தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்கள் என்பது அதைவிட பெரும்கொடுமை. அந்த வரிசையில் நாங்கள் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு பார்வையாளர்களைச் சோதிக்க வந்திருக்கும் அடுத்த பட...