LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்...