சிIII விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது.
ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத...