Shadow

Tag: SISU movie

SISU விமர்சனம்

SISU விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதையின் களம் வடக்கு ஃபின்லாந்தில் லேப்லாந்து (Lapland) எனும் பகுதியில் நிகழ்கிறது. ஒரு ஃபின்லாந்து வீரன், 30 பேர் கொண்ட நாஜிப்படையை எதிர்கொள்கிறான். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன், இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் படத்தைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். முதலாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், 30 நவம்பர் 1939 முதல் 13 மார்ச் 1940 வரை, ரஷ்யாவைத் தனி ஆளாக எதிர்கொண்டது ஃபின்லாந்து. மூன்று மாதங்கள் நடந்த அப்போரின் பொழுது, குளிர் மைனஸ் 43° செல்ஷியஸில் வாட்டியதால், அப்போருக்கு ‘குளிர்காலப் போர் (Winter War)’ எனப் பெயரிடப்பட்டது. பின், இரண்டாம் சோவியத் – ஃபின்னிஷ் போரில், ஃபின்லாந்தும் ஜெர்மனியும் தோளோடு தோள் சேர்ந்து, சோவியத் ரஷ்யாவை 1941 முதல் 1944 வரை எதிர்த்துப் போரிட்டது. செப்டம்பர் 1944 இல், ரஷ்யாவுடன் உடன்படிக்கை ஏற்பட்டு, ஜெர்மனியப் படைகளை ஃபின்லாந்து எல்லையை விட்டுத் துரத்தச் சம்மதி...